Saturday, June 28, 2008

நான் எல்லாமுமாகி தொடரும் விசாரனைகள்



1

‘சே’ சொன்னார்
ஒரு புரட்சிகாரனின் தகுதிகள்
வலிய கால்கள்
எளிய சுமை
பசித்த வயிறு
என்னிடமோ மூன்றும் இருக்கின்றன
நான் என்ன புரட்சிக்காரனா, பாட்டாளியா, பிச்சைக்காரனா?
எது நான்?
சம்பூரிலிருந்தும்,
காசா பள்ளத்தாக்கிலிருந்தும்,
துரத்தியடிக்கப்பட்டவர்களின் விசாரனையிது.
எனது தெரிவோ வன்முறை அரசியலாக இருக்கிறது
சேயின் குரல் ஒரு அசரீரியாக ஒலிப்பதை உள்வாங்கிக் கொள்கின்றேன்.

2

பல எண்ணங்களோடு அந்த வீதி வழியாக சென்று கொண்டிருந்தேன்,
சாத்திரம் பார்க்கும் இரு பெண்கள்
ஒரு பெண் தாயாகவும் மற்றையவள் மகளாகவும் இருக்க வேண்டும்
‘உங்களுக்கு ஒரு கண்டம் இருக்குதுசார்’
நிறுத்துகிறது ஒரு குரல்.
மகள் அழகாக இருந்தாள்.
அவளுக்கொரு அப்பா இருப்பதாவது தெரியுமோ என்னவோ.
எனது சின்ன வயசில் இவர்களை அடிக்கடி சந்தித்திருக்கிறேன்
வீடுவீடாக சென்று சாத்திரம் பார்ப்பார்கள்.
அப்பொழுது இப்படியொன்றை கேள்விப்பட்டிருக்கின்றேன்
இவர்களின் அழகான பெண்களை நல்லா குளிப்பாட்டிவிட்டு
பெரிய கடை முதலாளிகள் வைத்திருப்பார்களாம்,
அந்த நாய்கள் செய்தாலும் செய்யும்.
நான் எங்கு கொண்டுபோய் குளிப்பாட்டுவது, சரி.
கிறிஸ்தவம் இவர்களுக்கு தனது சாயத்தை பூசியும்
ஒரு மசிரும் நிகழவில்லை.
கிடைத்தவரைக்கும் கிறிஸ்தவ பரப்பிகளுக்கு லாபம்தான்

3

பெண் விடுதலைக்காக ஆண்கள் என்ன செய்யலாம்
எனக்குள் கிடக்கும் நீண்ட நாள் கேள்வியிது.
இப்பொழு என்னை நான் சொல்லியாக வேண்டும்.
எனக்குள் ஏதோவொரு சலனத்தை ஏற்படுத்தக்கூடியதொரு
பெண்ணை பார்த்ததும்,
நான் என்ன நினைக்கிறேன்?
நீங்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டும்.
எனது பார்வையோ அவள் கழுத்துக்கு கீழும் பிறகு காலிலும் பதிகிறது
எல்லாவற்றையும் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிடாதா
என்ற ஏக்கம் வேறு.
எனக்குள் அமுங்கிக் கிடந்து வெளிப்படும் ஆண்மேலாதிக்கத்தின் அசிங்கங்கள் இவை.
எனக்கு போலிகளில் நம்பிக்கையில்லை.
எத்தனை பேருக்கு உங்களைச் சொல்லும் துணிவிருக்கிறது.
பெண்விடுலைக்காக குரல் கொடுக்கும் ஆண் முற்போக்கு நன்பர்களே!கோட்பாட்டாளர்களுக்கு குண்டி சொறிவதை விட்டுவிட்டு
வெளியில் வாருங்கள்
முதலில் உங்களை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்,
என்பதைச் சொல்லுங்கள்.
பின்னர் தொடர்வோம் பெண்விடுதலைக்கான நமது போராட்டத்தை.

‘’’’

பிற்குறிப்பு இது கவிதையா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. எனது எண்ணங்களை இங்கு பதிவு செய்திருக்கின்றேன். அனைத்து கவிதைகளும் ஏதோவொரு வகையில் எண்ணங்களின் வெளிப்பாடுகள்தான். நீங்கள்; விரும்பினால் இதனை கவிதையென அழைக்கலாம். விரும்பாதவர்கள் மசிர் என்று அழைக்கலாம், நான் கோபப்படமாட்டேன். குண்டி, மசிர் போன்ற சொற்கள் இதில் இடம்பெற்றிருப்பதால் இது ஒரு பின்நவீனத்துவ கவிதையெனவும் சிலர் சிலாகிக்கக் கூடும் ஏதாவது ஒன்றைச் சொல்விட்டுப் போங்கள் இப்பொழுது நம்மத்தியில் எப்படியும் விமர்சிப்பதற்கான இடமுண்டு, அது தமிழ் பின்நவீனத்துவ பிதாமகர்கள் நமக்கு வழங்கியிருக்கும் கொடையாகும்.

No comments: